நாடாளுமன்ற தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு தேசியப் பட்டியல் ஆசனமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களுக்குமே இவர்களை நியமிக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக தினேஷ் குணவர்தவை நியமிக்கவும் உத்தேசித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவே இந்த முன்னணியை பதிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here