இன ரீதியான அச்சுறுத்தலைப் பொறுத்துக்கொள்ள முடியாது எனப் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணிக்குப் பிரித்தானியப் பிரதமர் கெயர் ஸ்டார்மர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில், வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, அந்த நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் யுனைட் தி கிங்டம் எனும் பெயரில் லண்டனில் பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்தப் பேரணியில் சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட மோதலில், 26 காவல்துறையினர் காயமடைந்தனர்.
இதனையடுத்து, சம்பவத்துடன், தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்குப் பிரித்தானியப் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.








