பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் நிறுவனம் (Biological Agency) அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் பரிசோதனைகளில் இருந்த இந்த தடுப்பூசி பாதுகாப்பானதும், புற்றுநோய்க்கு எதிராக விளைவாற்றல் கொண்டதுமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் வெரோனிகா ஸ்க்வோர்ட்சோவா தெரிவித்துள்ளார்.
புற்றுநோயின் தீவிரத்துக்கு ஏற்ப, கட்டி விரைவில் குறைவதுடன் குணமடையும் வாய்ப்பு 60 முதல் 80 சதவீதம் அதிகரிக்கும் எனவும், விரைவில் ரஷ்ய அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








