Wednesday, July 22, 2026
No menu items!

தடுப்பூசி

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவிப்பு!

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் நிறுவனம் (Biological Agency) அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் பரிசோதனைகளில் இருந்த இந்த தடுப்பூசி பாதுகாப்பானதும், புற்றுநோய்க்கு எதிராக விளைவாற்றல் கொண்டதுமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அந்த அமைப்பின் தலைவர் வெரோனிகா...

அதிகரிக்கும் சின்னம்மை நோய்த் தொற்று – கையிருப்பில் இல்லாத தடுப்பூசி!

சின்னம்மை நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த நோயைத் தடுக்க உதவும் தடுப்பூசி தற்போது வைத்தியசாலைகளில் கையிருப்பில் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. சில தனியார் வைத்தியசாலைகளின் அறிக்கைகளின் படி தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தடுப்பூசியின் விலை 7,500 ரூபாயில் இருந்து 9,500 ரூபாய் வரை உள்ளது. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, அரசாங்க வைத்தியசாலைகளிலும்...

கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சல் தொற்றால் 34 பேர் பலி..!

கொலம்பியாவின் பல பிரதேசங்களில் மஞ்சள் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஆண்டில் ஆரம்பமான இந்த தொற்றால் இதுவரை 74 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, கொலம்பியா அரசாங்கம், நாட்டில் அவசர சுகாதார நிலையை அறிவித்துள்ளது. இதனையடுத்து, மஞ்சள் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி...

விலங்குகளுக்கும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்..!

வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு மாகாண கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு திருநெல்வேலியில் உள்ள கால்நடை சுகாதார உற்பத்தி திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற போதே அவர்...

12 மாவட்டங்களுக்கு 4ஆம் திகதி முதல் தட்டம்மை தடுப்பூசி திட்டம்…!

12 மாவட்டங்களை உள்ளடக்கி நவம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக வைத்தியர் ஹசித திசேரா தெரிவித்தார்.  சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி பெற்றுக்கொண்ட  பாடசாலை மாணவர்கள் தீடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!

தடுப்பூசி பெற்றுக்கொண்ட 5 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்படும் HPV தடுப்பூசியை பாடசாலையில் செலுத்தியதைத் தொடர்ந்து 12 வயதுடைய ஐந்து பாடசாலை மாணவிகள் தலைவலி, வயிற்றுவலி மற்றும் மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குருவத்தோட்ட வெனிவெல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியின் ஏழாம் தரத்தில் கல்வி பயிலும் பாதிக்கப்பட்ட...

இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்..!

சீதுவ விஜய குமாரதுங்க ஞாபகார்த்த வைத்தியசாலையில் 24 வயதுடைய பெண்ணொருவர் தடுப்பூசி மருந்தின் பாதகமான எதிர்விளைவுகளுடன் தொடர்புடையதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்ற பரிதாபகரமான மரணம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். உள்ளக விசாரணைக்கு கூடுதலாக,...

தொடரும் கொவிட் மரணங்கள்…!!

கொவிட் வைரசின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனீவாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதும் உலகம் முழுவதும் ஒரு வாரத்தில் 1,700 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பதாக...

தடுப்பூசி செலுத்திய நபர் மரணம்!!!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த நபர் கொழும்பு  தேசிய வைத்தியசாலையின் 17வது அறையில் தீக்காயங்களுக்குள்ளாகிய நோயாளி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு செபிரொக்சிமி (Cefuroxime) என்ற தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அந்த நபர் உயிரிழந்ததாகவும் அவர் 31...

அஸ்ட்ராஜெனெகா  பற்றி  வைத்தியர் வெளியிட்ட தகவல்..!

அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் அச்சம்கொள்ள தேவையில்லை என தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்தியதால், இரத்த உறைவு,  பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு  உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக அந்நிறுவனத்தின் மீது உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img