யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 154 பொதிகளில் அடங்கிய 300 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா இன்று சனிக்கிழமை (3/22/2025) கைப்பற்றப்பட்டுள்ளது.

இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவம் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த  கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

கைப்பற்றப்பட்ட பொருட்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் சனிக்கிழமை (3/22/2025) ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெருந்தொகையிலான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here