தர்மபுரம் பகுதியில் இருந்து பேருந்து ஒன்றில் கசிப்பினை கடத்த முற்பட்ட சந்தேக நபர் தர்மபுர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார் .

கடதாசி பெட்டியில் பொதிசெய்யப்பட்டு தருமபுரம் பஸ்தரிப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த கசிப்பினை பேருந்தில் ஏற்ற முற்பட்டவேளை பொலிசாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக   நபரிடமிருந்து 28 லிட்டர் கசிப்பும் கசிப்பு கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சந்தேக நபர் மற்றும் தடையப்பொருளும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here