நொச்சியாகம – காலதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்
உந்துருளியில் பயணித்த குறித்த இருவரும் எதிர்த் திசையில் பிரவேசித்த பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த இருவரும் 16 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.








