பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு வழங்க விரும்பினால் “TELL IGP“ என்ற பொலிஸ் இணையத்தளத்தை பயன்படுத்த முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு தங்களது முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அல்லது பொலிஸ்மா அதிபருக்கு தங்களது முறைப்பாடுகளை வழங்க விரும்பினால் https://telligp.police.lk/ என்ற இணையத்தளத்தை பயன்படுத்த முடியும்.
இந்த இணையத்தள சேவையானது பொதுமக்களுக்காக மீள புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன் 24 மணிநேரமும் இயங்கும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








