பொலிஸ் மா அதிபர் ஒருவர் இல்லாத காரணத்தினால் யுக்திய நடவடிக்கைக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் பதவியில் இருந்த சந்தர்ப்பத்தில் ‘யுக்திய’ வெற்றியடைவதற்காக தினசரி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி அதிகாரிகளை சரியான முறையில் வழிநடத்தியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “யுக்திய” நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த மார்ச் மாதம் முதல் பாதாள உலகக் குழுக்களை ஒழிப்பதற்கான யுக்திய நடவடிக்கை பலப்படுத்தப்பட்டதாகவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலின் போது பாதுகாப்பை கையாள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக குழுவொன்று கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.







