போலந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி நாளை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதியும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் துணைத் தலைவருமான காஜா கல்லாஸை பிரதிநிதித்துவப்படுத்தி அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, அவர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை சந்தித்து, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் போலந்தின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இலங்கை வரவுள்ளனர்.






