உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (27.05.2025) நள்ளிரவுடன் முடிவடைகிறது.

செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவிப்பு தடைப்பட்டுள்ளது.

பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பெயர்ப் பட்டியலை இன்னும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லை என மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here