ரணவிரு அறக்கட்டளையின் கீழ் வீடு கட்டுவதற்காக காணி மாற்றம் செய்வதற்காக ரூ.20,000 இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மகாவெலி அதிகார சபையின் சந்துன்பிட்டிய முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.
வெலிகந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் நேற்று (21) சந்துன்பிட்டிய காரியாலயத்தில் வைத்து இவரை கைது செய்தனர்.
சதுப்பு நிலமாக மாற்றப்பட்ட காணிக்கு மாற்றாக புதிய இடம் வழங்க அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக இலஞ்சம் கோரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.








