மட்டக்குளி மற்றும் பமுனுகம பொலிஸ் பிரிவுகளுக்குள் உள்ள பகுதிகளில் மூன்று அடையாளம் தெரியாத ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (29) கிடைத்த தகவல்களின் பேரில் விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, மட்டக்குளி காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி கங்கையின் முகத்துவாரத்திலும் இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மூன்றாவது சடலம், பமுனுகம எபாமுல்ல பகுதியில் கட்டுமானத்தில் இருந்த இரண்டு மாடி வீடொன்றின் பின்புறத்தில் கண்டெடுக்கப்பட்டது.
அந்த நபர் கருப்பு சாரம், இளம் நீல நிறக் குறுகிய கை சட்டை அணிந்திருந்ததாகவும், 50–60 வயதுக்குள், சுமார் 5 அடி 7 அங்குல உயரம் கொண்ட ஒல்லியான உடல்வாகையுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலங்களின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
மட்டக்குளி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில்,
பமுனுகம சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு இடங்களிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








