நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை(21) காலை இடம்பெறவுள்ளது.

அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 9 மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

இதேவேளை மன்னார் மாவட்டத்தில்  90 ஆயிரத்து 607 வாக்காளர்கள்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here