பெலியத்தை, தெத்துவாவெல தம்பேஆர பகுதியில் மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பெலியத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

74 வயதுடைய திருமணமாகாத ஓய்வுபெற்ற பாடசாலை ஆசிரியை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது காணிக்குச் சென்று மீண்டும் வீடு நோக்கி சென்றுகொண்டிருக்கும் போது மற்றுமொரு காணியில் பன்றிகளை வேட்டையாடுவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெலியத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here