கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன்  ஒருவர் நேற்றைய தினம் (08) உயிரிழந்துள்ளார்.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

வவுனியா -பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை  கிளிநொச்சி நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினரிடம் கையளிக்க  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதோடு மேலதிக விசாரணைகளை  இராமநாதபுரம் பொலிசார்  முன்னெடுத்து வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here