இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தற்போது முன்னெடுத்து வரும் சட்டப்படி வேலை செய்வதற்கான போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை (செப்டம்பர் 24) வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபாத் பிரியந்த, நேற்று (செப்டம்ப-22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டார்.

“எங்கள் கோரிக்கைகள் தீர்வு காணப்படவில்லை என்றால், எதிர்வரும் 24ஆம் திகதி தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளோம். அது ஒரு நாள் பணிப்புறக்கணிப்பா அல்லது தொடர்ச்சியான போராட்டமாக இருக்குமா என்பதை அன்றைய தினமே அறிவிக்கப்படும்,” என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here