“தென்மராட்சி முன்பள்ளி ஆசிரியர் ஊக்குவிப்பு ஒன்றியமும்,தென்மராட்சி விளையாட்டு அபிவிருத்தி ஒன்றியமும்” இணைந்து நடாத்திய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மதிப்பளிக்கும் நிகழ்வும், விளையாட்டு வீரர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் யாழ்.சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் நேற்றைய தினம் (27.10.2024) இடம்பெற்றது.
இதன்போது முன்பள்ளி ஆசிரியர்கள் “சேவையின் மகுடம்” விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
மேலும், விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய விளையாட்டு அணிகள் மற்றும் வீரர்களுக்கு பணப் பரிசில்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சமூக செயற்பாட்டாளர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில்,ஜனாதிபதி சட்டத்தரணியும், ஜனநாயக தமிழரசுக் கூட்டணி முதன்மை வேட்பாளருமான கே.வி. தவராசா, வேட்பாளர் ஸ்ரீகாந்தரூபன் விமலேஸ்வரி, வேட்பாளர் கருணாகரன் குணாளன், முன்னாள் போராளி வைத்திலிங்கம் பால சுரேஷ், சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.












