எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் கட்சி பேதமின்றி இன்று (26) கொழும்பில் ஒன்றுகூட முடிவு செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதுக்குறித்து விவாதிக்க, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) விசேடக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டக் குழுக்களும் வழக்கில் பங்கேற்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here