வரிகளை விதித்து அரச வருமானத்தை அதிகரிப்பது ஓர் பாரிய விடயம் அல்ல இது “ரத்த காட்டேரி” போல மக்களின் வருமானத்தை உறிஞ்சுவதாகும் என்று  ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சார கட்டணங்கள், நீர் கட்டணங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள வரிகளை உயர்த்தி 4,990 பில்லியன் ரூபாய் அரச வருமானத்தை 5,100 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பதாக அரசாங்கம் கூறி வருகிறது.

இது முழுக்க முழுக்க மக்களிடமிருந்து வரி சுமையை அதிகரிப்பதற்கே பாத்திரமாகிறது என்றார்.

மேலும், பெரிய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனை இல்லாமல் இவ்வாறு வரிகளை விதிப்பது சரியான நடைமுறை அல்ல என்றும், அரசாங்க செலவுகளை குறைத்து, வரவு செலவுத் திட்ட இடைவெளியை குறைப்பதே சிறந்த வழி எனவும் வலியுறுத்தினார்.

இந்த விடயத்தை வீட்டில் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்யும் அம்மாவும் செய்வார் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here