பதுளை – பண்டாரவளை வீதியில் ஹால்பே எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (12) பிற்பகல் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவாய, கல்போக்க, பெரகெட்டியவைச் சேர்ந்த 43 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து பண்டாரவளை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் லொறியில் மோதி மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி, அருகிலுள்ள தொலைபேசி கம்பத்தில் மோதியது. பின்னர் கம்பம் சரிந்து விழுந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
லொறியின் சாரதியை எல்ல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தெமோதர வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








