ஈச்சங்குளம் பகுதியில் பெண் ஒருவரை தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய சந்தேகநபர் ஒருவர் சுந்தரபுரம் பகுதியில் நேற்று (19) கைதுசெய்யப்பட்டதாக ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை சுட பயன்படுத்திய துப்பாக்கியையும் பொலிஸார் மீட்டு குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.







