பொதுப் பயணிகள் போக்குவரத்திற்குத் தேவையான வாகனங்களுக்கான இறக்குமதித் தடைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் பேருந்துகளை இறக்குமதி செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஏனைய வாகனங்களுக்கான தடை எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here