வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மாவட்ட அளவில் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்து மாவட்டங்களுக்குப் பொறுப்பான உதவித் தேர்தல் ஆணையாளர்கள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன், 2025 ஆம் ஆண்டிற்கான பிரதான வாக்காளர் பட்டியலை சான்றளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here