மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி வாழை திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வாழை திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை!

‘திரைப்படத்தின் வெற்றி’ என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் ‘வாழை’ ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம்.

விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் , அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் (இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது’.என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here