விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்த இரு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் 22 வயதான இத்தாலியர் மற்றும் 32 வயதான பிரித்தானிய பிரஜை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கண்டி புவேலிக்கடை பகுதியில் வைத்து குறித்த வெளிநாட்டவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here