கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வீட்டு வாடகை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுரிமையாளர் வாடகைக்கு தங்கியிருந்தவர்களை கூரிய ஆயுதத்தால் தாக்க முற்பட்டுள்ளார். இதில் காயமடைந்த கணவனும் மனைவியும் இறந்தவர் கொண்டுவந்த ஆயுதத்தை எடுத்து அவரை தாக்கியுள்ளனர்.
இச் சம்பவத்தில் சந்தேக நபரும் அவரது மனைவியும் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






