ஈரானின் மூத்த உத்தியோகத்தரான வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி துருக்கியின் அங்காரா நகருக்கு வந்துள்ளார் என  ஈரானின் அரசியல் ஊடகம் தெரிவித்துள்ளது.

40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அமைச்சர்கள் பங்கேற்கவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அவர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தக் கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் ஐரோப்பிய அதிகாரிகளுடன் அரக்‌சி நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னணியில் நடைபெறுகின்றது.

இதேவேளை, இஸ்ரேலின் தொடக்கத் தாக்குதலுக்கு பின்னர், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இரண்டு முறை தொலைபேசி உரையாடல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, எதிர்பார்க்கப்படும் போருக்கு மாறாக, அமைதிக்கான வழிவகை எனப் பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை உரையாற்றிய டிரம்ப், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது எனக் கூறியுள்ளார்.

இது, நிலைமை மேலும் பதற்றமடையும் வாய்ப்பைப் பேச வைக்கும் ஒரு மாற்றுக்கருத்தை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here