நீண்ட விடுமுறை மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

கொழும்பு, கோட்டையில் இருந்து பதுளை வரையிலும், பதுளையில் இருந்து கொழும்பு, கோட்டை வரையிலும் விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேநேரம் கொழும்பு, கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்றும் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளிலும் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here