வென்னப்புவ புதிய வீதியில் கொரககாஸ் சந்தி பகுதியில் இன்று (17) காலை 6.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் விபத்து ஏற்பட்டது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளின் பின்னில் அமர்ந்த இளம் பெண் மற்றும் வேன் சாரதி காயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் கொஸ்வத்தையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம சேவகர் என்று தெரியவந்தது. இறந்தவரின் மகளும் காயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.

விபத்துக்கான விசாரணையை வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here