நாட்டின் பல பகுதிகளில், இன்று (29) மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்தையும் மீறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில், அதிக வெப்பமான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 12 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொதுமக்கள்:

  • போதிய அளவு நீர் அருந்த வேண்டும்,
  • வெப்பத்தைத் தவிர்க்க நிழலில் தங்குவது,
  • தேவையற்ற வெளிவீதிப் பயணங்களை முடிந்தவரை தவிர்ப்பது போன்ற வழிகளால் தங்களை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வயோதிபர்கள் மற்றும் நீண்டநாள் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான கவனத்தையும் அதிகரிக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here