ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மில்லகஹமுல்ல பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை 5.30 மணியளவில், கொழும்பிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற உந்துருளி, அதே திசையில் பயணித்த பாரவூர்தியை முந்தச் செல்ல முயன்றபோது விபத்து இடம்பெற்றது.

விபத்தில், உந்துருளியின் பின் இருக்கையில் பயணித்த 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார், பாரவூர்தியின் இடது பின்புற சக்கரத்தின் கீழே விழுந்து நசுங்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உந்துருளியில் முன்னிருந்து செலுத்தியவர் காயமடைந்த நிலையில், நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கினிகத்தேன காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here