சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட  22 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (22.08) கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய வர்த்தகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வர்த்தகர் நேற்று (22.08) பிற்பகல் 4 மணியளவில் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இந்த வர்த்தகர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 21,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 108 சிகரெட் கார்ட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வர்த்தகருக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here