Saturday, July 25, 2026
No menu items!

ரயில் சேவை

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

ரயில் சேவையை முறையாக இயக்க முடியாத அதிகாரிகள் சேவையிலிருந்து விலகிச் செல்லலாம் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட போக்குவரத்து துறையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்தார். இக் கலந்துரையாடல் களுத்துறை மாவட்ட செயலகத்தின்...

சிறி தலதா வழிபாடு இரண்டாவது நாள் இன்று..!

சிறி தலதா வழிபாடு இரண்டாவது நாளாக இன்று (4/19/2025) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதன்படி, சிற தலதா வழிபாடு இன்று மதியம் 12 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, சிறி தலதா மாளிகையில் வழிபாடு செய்வதற்காக மிகப்பெரிய அளவிலான பக்தர்கள் கூட்டம் இன்னமும் வரிசைகளில் காத்திருப்பதை காணமுடிகிறது. இதற்கிடையில், ஸ்ரீ தலதா வழிபாட்டிற்கு வரும்...

எதிர்வரும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை!

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் சிறப்பு ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, 11, 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் கொழும்பிலிருந்து பதுளை, அனுராதபுரம்,...

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்ட ரயில்..!

நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயிலொன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ரயில் தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக குறித்த மார்க்கத்தின் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய, தற்போது ரயிலின் தடம்புரள்வை சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக...

பேருந்து, ரயில் சாரதிகளாக பெண்களை பணியமர்த்த அரசாங்கம் தீர்மானம்..!

இலங்கை போக்குவரத்து சபைக்கும் ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (3/7/2025) பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இந்தக் கருத்துகளை வெளிப்படுத்தினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், "நாளை (8/3/2025) கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும்...

வெள்ளப் பெருக்கு காரணமாக தடைப்பட்ட ரயில் சேவை!

பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட ரயில் சேவை இன்று (21) காலை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலனறுவைக்கும் மனம்பிட்டியவுக்கும் இடையிலான பிரதான வீதியில் ஏற்பட்ட வெள்ளம் பெருக்கு காரணமாக குறித்த வீதியில் பஸ்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே திணைக்களம் கடந்த 19 ஆம் திகதி முதல்...

தொடர்ச்சியாக ரயில் சேவைகள் ரத்து – வெளியானது காரணம்..!

ரயில் சாரதிகளின் தரம் உயர்த்தல் பரீட்சைக்கு தயாராகி வருவதால் இன்று (1/18/2025) காலை 08 குறுகிய ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று (17/1/2025) சுமார் 25 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலையக ரயில் சேவை பாதிப்பு..!

ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள் அறிவிப்பு !

தைப் பொங்கல் பண்டிகை, சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை நாட்களில் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இலங்கை ரயில்வே சிறப்பு ரயில் சேவைகளை அறிவித்துள்ளது. 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேதிகளில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை மற்றும் காங்கேசன்துறைக்கு ரயில்கள் இயக்கப்படும். கொழும்பு கோட்டை முதல் பதுளை வரை 7:30 PM, 10, 12,...

கடலோர ரயில் சேவையில் பாதிப்பு!

கடலோரப் பாதையில் இன்று ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்மலானைக்கும் கல்கிசைக்கும் இடையில் தண்டவாளம் உடைந்ததன் காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நாட்டின் ஒருசில பகுதிகளில் மழை!

மேல் மாகாணம்,சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும்,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது சமீபத்திய வானிலை முன்னறிவிப்பில்,நாட்டின்...
- Advertisement -spot_img