வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள்மயப்படுத்தும் நோக்கில் விளிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நேற்று (16/1/2025) காலை 9.30 மணியளவில் யாழ். நகர்ப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லாப்பட்டதாரிகள் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த விழிப்புணர்வு செயற்திட்டத்தில் துண்டுப்பிரசுரம் வழங்கல், மக்களின் கருத்துக்களை உள்வாங்கல், போன்ற நிகழ்வுகளை வேலையில்லாபட்டதாரிகளின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வு உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்றலில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து யாழ். நகர்ப்பகுதிக்குள் பேரணி இடம்பெற்றதுடன், பட்டம் பெற்றுவிட்டு தாங்களும் சாதாரண வேலைகளைத்தான் செய்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் முகமாக வீதியை கூட்டுதல், குப்பை வண்டியை தள்ளுதல் போன்ற விழிப்புணர்வு செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

தமது பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் மக்கள் மயப்படுத்தி தமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வலுச்சேர்க்கும் நோக்குடன் இச்செயற்பாட்டை முன்னெடுத்தனர்.

[ரட்னசிங்கம் – முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here