பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா (Luiz Inacio Lula da Silva ) திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர், தனது வீட்டில் தவறி விழுந்து தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வாவை நீண்ட தூர விமான பயணங்களைத் தவிர்க்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில், இணைய வழி காணொளி தொழில்நுட்பம் மூலம் பிரேசில் ஜனாதிபதி, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.