பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் பயிரிடப்படும் தக்காளி, ஒரு வகை வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த வைரஸ் தாக்கம் காரணமாக பயிர்ச்செய்கை முற்றிலும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, வெலிமடை, ஊவாபரணகம, எல்ல, பண்டாரவளை மற்றும் ஹப்புத்தளை போன்ற பகுதிகளில் இவ்வாறு தக்காளி பயிர்ச்செய்கையானது வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த வைரஸ் தாக்கத்துக்குப் பல கிருமிநாசினிகளைப் பயன்படுத்தியும் அது பயனளிக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தக்காளிகள் வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாக்கப்படும் பட்சத்தில் தக்காளி பயிர்ச்செய்கையினை கைவிட வேண்டிய நிலை ஏற்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here