ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய – அத்துபொந்தேன் பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டது.
இந்த போதைப்பொருள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த போதைப்பொருள் அடங்கிய பொதிகளில் பாகிஸ்தானிலுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பயன்படுத்தும் அடையாளங்கள் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








