அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் ஹென்றி ஹிஸ்ஸிங்கர் (Henry Kissinger) தனது 100 வது வயதில் காலமானார்.
1923 ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்த ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அவரது குடும்பத்தினருடன் ஜேர்மனியிலிருந்து தப்பியோடி அமெரிக்காவிற்கு சென்றார்.
1943 இல் அமெரிக்க பிரஜையான இவர் அமெரிக்க இராணுவம் மற்றும் அரசாங்கத்திலும் பல சேவைகளை ஆற்றியிருந்தார்.
குறிப்பாக நிக்சன் போர்ட் அரசாங்கங்களில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இராஜாங்க செயலாளராகவும் பணியாற்றியிருந்தார்.
பின்னர், அமெரிக்க இராணுவத்திலும் புலனாய்வு பிரிவிலும் பணியாற்றியிருந்தார்.
மேலும், ஹென்றி ஹிஸ்ஸிங்கர் அமெரிக்க வெளிவிவகார பாதுகாப்பு கொள்கைகளில் முக்கியமான சர்ச்சைக்குரிய பங்களிப்பை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.