நாடாளுமன்றமானது இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நாட்டில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் அவற்றின் சேவைகளை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
மாலை 05:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை ஆளுங்கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.