ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!
கொழும்பு , மொரட்டுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முரவத்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவை பொலிாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார். சந்தேக
சீரற்ற வானிலையால் இதுவரை 16 பேர் உயிரிழப்பு..!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (30.11.2024) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 24 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக
சீரற்ற காலநிலையினால் சேதமடைந்த பயிர்ச்செய்கை நிலங்களுக்கு இழப்பீடு..!
சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 375,000 ஏக்கர் பயிர்ச்செய்கை நிலம் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. வெள்ளநீர் வடிந்தவுடன் பயிர் சேத மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்படும் என சபையின் தலைவர் பேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்தார். வெள்ளத்தினால் நாசமடைந்த ஆறு வகையான பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன அறிவித்துள்ளார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரம் – காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்பு..!
காரைதீவு – மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, அனர்த்தத்தில் காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியிலிருந்து மதரஸா பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுடன் சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று கடந்த 26ஆம் திகதி இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மூவர் கைது..!
தென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் ஆட்ட நிர்ணய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 2015 மற்றும் 2016 ஆண்டு நடைபெற்ற இருபதுக்கு 20 சேலஞ் தொடரில் ஆட்ட நிர்ணய சதி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒரு காலத்தில் உலகின் முதல்தர ஒருநாள்
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழப்பு..!
நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர். நைஜீரியாவின் கோகி மாநிலத்திலுள்ள சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது படகில் 200 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விபத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை அதிகாரி உயிரிழப்பு..!
காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடற்படை உத்தியோகத்தர் அருகிலுள்ள கடையொன்றில் உணவுப் பொதியை வாங்கிக்கொண்டு முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேற்றிரவு காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம், புனேவ கடற்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நிட்டம்புவ பகுதியை 41 வயதுடைய கடற்படை அதிகாரியே காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது..!
மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 09 பேர் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி சந்தேக நபர்கள் சிலர் துப்பாக்கிகளை காண்பித்து மிரட்டி 06
நாட்டு அரிசி இறக்குமதிக்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரல் ஆரம்பம்..!
இந்தியாவிலிருந்து 70,000 மெற்றிக் தொன் நாட்டு அரிசியை இறக்குமதி செய்வதற்கு விநியோகத்தர்களிடம் இருந்து விலைமனு கோரப்பட்டு வருவதாக லங்கா சதோச நிறுவனத்தின் தலைவர் சமித பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி, அரிசியை இறக்குமதி செய்வது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) முதல் 7 நாட்களுக்குள் விநியோகத்தர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் அரிசியை நாட்டுக்கு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும்
7 கஞ்சா தோட்டங்கள் சுற்றிவளைப்பு – 8 பேர் கைது..!
ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர காட்டுப் பகுதியில் 08 1/2 ஏக்கர் நிலப்பரப்பில் 07 கஞ்சா தோட்டங்கள் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதோடு, உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் 08 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தனமல்வெவ, சூரியவெவ பிரதேசங்களை சேர்ந்த 29 –