2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டதாகவும், அதில் மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் நிவாரணங்களும் இல்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் தனது வரவு செலவு திட்ட  உரையை வழங்கியதைத் தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

அத்துடன், 2026ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கான சலுகைகளும் இல்லை

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம், சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்டமாக   அமையவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்தோடு இந்த அரசாங்கம் இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக உள்ளதாக தெரிவித்த சஜித் பிரேமதாஸ, அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதுவும் உள்ளடங்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here