2022 ஜூலை 17ஆம் திகதி, அப்போதைய பதில் ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்த அவசரகாலச் சட்டங்கள் சட்டப்பூர்வம் இல்லாதவை எனவும், அவை அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகவும், இலங்கை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 02ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டங்கள் தன்னிச்சையானவை மற்றும் செல்லுபடியாகாதவை என, நீதியரசர்கள் குழுவில் பெரும்பான்மையானோர் தீர்மானித்தனர்.
இலங்கை பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.
இருப்பினும், மூன்று நீதியரசர்களில் ஒருவரான அர்ஜுன ஒபேசேகர, தனது தனிப்பட்ட கருத்தில், பதில் ஜனாதிபதியின் அவசரச் சட்டப் பிரகடனம் சட்டபூர்வமானது என்றும், அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்றும் தெரிவித்தார்.








