ஆபிரிக்காவின் எத்தியோப்பியாவிலிருந்து கடல் மார்க்கமாக பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 64 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய தரைக்கடலில் ஏமன் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது குறித்த படகு கடலில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அறிந்தவுடன் ஏமன் கடற்படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப் பணியின்போது 12 அகதிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆனாலும் 68 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, 74 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
அதேவேளை காணாமல் போன 74 பேரும் உயிருடன் இருப்பார்களா என்பது சந்தேகம்தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.







