வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்க நேற்று (07) அதிகாலை ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றார்.
இன்று (08) ஆரம்பமாக உள்ள இந்த அமர்வில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் விசேட அறிக்கை ஒன்றை அமைச்சர் வெளியிடவுள்ளார்.
மேலும், ஜெனீவாவில் தங்கியிருக்கும் காலத்தில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் உடனும் அவர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
இந்த மனித உரிமைகள் கூட்டத் தொடரில், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் அமைச்சர் விஜித ஹேரத்துடன் இணைந்து பங்கேற்கவுள்ளார்.








