வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவகங்களின் புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வில் மாநகர முதல்வர் காண்டீபன் இந்த உத்தரவை வழங்கினார்.

வவுனியா நகரில் உள்ள சில உணவகங்களின் பின்புறங்களில் புகைப்பிடிக்க சிறிய பகுதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மாநகர சுகாதார குழுவின் பரிந்துரையின் பேரில் அவை உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் முன்பாக பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் போதைமாத்திரை வியாபாரத்தில் ஈடுபடுவதாக உறுப்பினர் க. கிருஸ்ணதாஸ் சுட்டிக்காட்டினார்.

இதைத் தடுக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் காண்டீபன் உறுதியளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here