ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தித் திட்டத்திற்கு வாகன மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் முழு ஆதரவை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் செப்டம்பர் 16 அன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகன இறக்குமதி துறையின் விருத்தி, எதிர்வரும் பாதீட்டுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் இலத்திரனியல் உபகரண இறக்குமதியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
இலத்திரனியல் உபகரணங்களில் வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யும் சில குழுக்களின் நடவடிக்கைகள் சந்தையில் தரம் குறைவு மற்றும் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாகவும், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.








