ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமெரிக்காவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, நேற்று (25) இரவு ஜோன் எஃப். கெனடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானுக்குப் பயணமானார்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டிருந்த விஜயம், முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்முறையினதும், வெளியுறவுத் துறையினதும் ஓர் அங்கமாகக் கருதப்படுகிறது.

ஜப்பானிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் அடிப்படையில், ஜனாதிபதி செப்டம்பர் 27 முதல் 30ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

இந்த விஜயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரதும் ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here