மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தின் போகோ நகரம் அருகே நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவாகக் காணப்பட்ட இந்த நிலநடுக்கம், பெரும் உயிரிழப்பும் சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய தகவலின்படி, 26 பேர் உயிரிழந்துள்ளார்கள் மற்றும் 147 பேர் காயமடைந்துள்ளனர்.
பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போகோ நகரில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்ததில், அங்கு கூடியிருந்தவர்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் செபு மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் மற்றும் வரலாற்று சிற்றாலயங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
செபு நகரில் சுமார் 10.6 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர். பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs) சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதியளித்துள்ளது.
இருப்பினும் சிறிய கடல் அலை அச்சுறுத்தல் காரணமாக கடற்கரை பகுதிகளை விட்டு விலக இருந்ததாக அறிவுறுத்தியது.








