வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (13) முதல் வட மாகாண ஆசிரியர்கள் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது,
“கல்வித் திணைக்களம் மேற்கொண்டுள்ள இடமாற்றங்கள் பல ஆசிரியர்களுக்கு அநீதி விளைவித்துள்ளன. இதனை திருத்தும் வரை எங்கள் பணிப்புறக்கணிப்பு தொடரும்,” என அவர் கூறினார்.
இதேவேளை, குறித்த ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கமும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது, சங்கத்தின் உப செயலாளர் காரளசிங்கம் பிரகாஷ் தெரிவித்ததாவது,
“இந்த இடமாற்றங்கள் கல்வித் துறையில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நியாயமான நடைமுறையைப் பின்பற்றுமாறு கல்வித் திணைக்களத்திடம் கோருகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.








